பெரிக்காத்தானில் இணையும் ம.இ.கா! தீர்மானத்தை நிறைவேற்றிய கெடா மாநில ம.இ.கா!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
நேற்று கெடா மாநில ம.இ.காவின் 79 ஆவது பேராளர் மாநாட்டில் பெரிக்காத்தானில் ம.இ.கா இணைய வேண்டும் என தீர்மானம் ஏற்றப்பட்டதுடன் ம.இ.காவின் தேசியத் தலைவர் தேசிய உச்சமன்ற உறுப்பினர்களுக்கும் ம.இ.கா பெரிக்காத்தானில் இணைய வேண்டும் என கெடா மாநில ம.இ.காவினர் விரும்புவதாகப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ம.இ.கா தலைமை குழுவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இப்பேராளர் மாநாட்டில் இந்த தீர்மானத்தை முன்வைப்பதால் மற்ற மாநில ம.இ.காவினரும் பெரிக்காத்தானுடன் இணைவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என தாம் நம்புவதாகக் கெடா மாநில ம.இ.கா தலைவர் S.K. Suresh தெரிவித்தார்.
ம.இ.கா பெரிக்காத்தானுடன் உடன்படிக்கையில் ஈடுபடுவது குறித்து அம்னோவிடம் தெரிவிக்க வேண்டிய எந்தவோர் அவசியமுமில்லை, முன்னதாகப் பாஸ் கட்சியுடன் அம்னோ உடன்படிக்கையில் ஈடுபட்ட போது ம.இ.காவிடம் அம்னோ கலந்தாலோசிக்கவில்லை என்பதால் இப்போது ம.இ.கா எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அம்னோவிடம் தெரிவிக்க வேண்டிய அவசிமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இது கெடா மாநில ம.இ.காவின் முடிவு என்றாலும் தேசிய ம.இ.காவினர் இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பார்கள் என்பதைத் தாம் நம்புவதாக S.K. Suresh தெரிவித்தார். பேராளர் மாநாட்டில் பங்கேற்ற ம.இ.காவின் தேசியத் தலைவர் உட்பட தேசிய தலைமைக்குழுவிற்குக் கெடா மாநில மா.இ.காவின் இந்த தீர்மானம் ஆச்சிரியமாக இருந்தாலும் இதன் அவசியத்தைக் கெடா மாநில ம.இ.கா உணர்ந்திருப்பதாக S.K. Suresh சுட்டிக்காட்டினார்.
கெடாவில்
வாழும் இந்தியர்கள் பெரும்பாலானோர் ம.இ,காவின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதையும் S.K. Suresh நினைவூட்டினார். கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தானும் வழங்கிய ஆதரவால் கெடா
இந்தியர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பதால் இந்தியர்களை அரவணிக்கும்
ஒரே கட்சி ம.இ.கா என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதால் இந்த தீர்மானத்தைக் கெடா மாநில
ம.இ.கா முன்வைத்திருப்பதாக S.K. Suresh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



