ஒற்றுமைக் கூட்டணியிலிருந்து ம.இ.கா வெளியேற வேண்டும்! – டி.ஏ.பி துளசி விளாசல்!
- Thinagaren Sanggaren
- 28 Jul, 2025
ஜூலை 28,
ஒற்றுமை கூட்டணியில் அழையா விருந்தாளியாக இருப்பதால் ம.இ.கா மிகுந்த கவலையடைவதாக ம.இ.காவினர் நினைத்தால் ஒற்றுமை கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறும்படி புந்தோங் சட்டமன்ற உறுப்பினரும் டி.ஏ.பியின் துணைத் தொடர்புச் செயலாளருமான துளசி மனோகரன் காட்டமாகப் பதிலடிக் கொடுத்துள்ளார். முன்னதாக ம.இ.காவின் துணைத் தலைவர் சரவணன் ஒற்றுமைக் கூட்டணியில் ம.இ.கா ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அழையா விருந்தாளியாக ம.இ.கா இருப்பதாகவும் வெளியிட்டிருக்கும் கருத்து அபத்தமானது என துளசி மனோகரன் தெரிவித்தார். இன்னமும் அரசாங்கத்தில் ம.இ.கா இருக்க வேண்டுமா வேண்டாமா என்கிற சிந்தனையில் அவர்கள் இருந்தால் தாராளமாக அவர்கள் ஒற்றுமைக் கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என துளசி மனோகரன் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
ம.இ.கா ஒதுக்கப்படுவதாக
எந்த அடிப்படையில் சொல்கிறார்கள், இன்னமும் ம.இ.காவினர்
அரசாங்க நியமனங்களில் இருந்து வருகிறார்கள் என்பதைச் சரவணன் போன்றவர்கள் உணர வேண்டும்.
அழையா விருந்தாளியாக ம.இ.கா இருப்பதாக எண்ணினால் தாமதிக்காமல் உடனடியாக அனைத்து அரசாங்கப்
பதவிகளிலிருந்தும் ஒற்றுமைக் கூட்டணியிலிருந்தும் வெளியேற வேண்டும் என புந்தோங் சட்டமன்ற
உறுப்பினரான துளசி மனோகரன் வலியுறுத்தினார். இம்மாதிரியான கருத்துகளை வெளியிட்டு தேவையற்ற
குழப்பங்களை ஏற்படுத்தாமல் ஒத்துழைத்து மக்கள் நலனுக்காகச் சேவையாற்றுவோம் என துளசி
மனோகரன் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



