பாரிசானிலிருந்து ம.இ.கா & ம.சீ.ச வெளியேறினால் மரியாதையாவது மிஞ்சும்! – ம.சீ.ச எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 21,

ம.இ.காவும் ம.சீ.சவும் அதன் சமூகத்திடம் கொஞ்சமாக ஆதரவு இருக்கும் போதே பாரிசானிலிருந்து வெளியேறுவது இரு கட்சிகளுக்கும் மரியாதையாக இருக்கும் என ம.சீ.ச முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான Ti Lian Ker வலியுறுத்தினார். அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ டி.ஏ.பியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் ம.சீ.ச பாரிசானிலிருந்து வெளியேறும் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் ம.இ.கா இன்னும் இது மாதிரி பாரிசானிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவொரு முக்கிய காரணத்தையும் வெளியிடவில்லை. 

கடந்த காலங்களில் ம.இ.காவும் ம.சீ.சவும் அதன் சொந்த சமூகத்தின் நம்பிக்கை இழந்தது உண்மையாகவே இருந்தாலும் தற்போது இரு கட்சிகளும் அதன் சமூகத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் மீண்டும் பெற்று வருகிறது. இப்போதைய சூழலில் ம.சீ.சவுக்கும் ம.இ.காவுக்கும் அதன் சமூகத்திடமிருந்து பெற்றிருக்கும் ஓரளவு நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இரு கட்சிகளும் வெளிப்படையாக அதன் அரசியல் எதிர்காலம் குறித்து அறிவிக்க வேண்டும். அப்படி வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே அதன் சமூகத்தின் நம்பிக்கை அவர்கள் மீண்டும் இழக்கமாட்டார்கள். பாரிசான் தலைவர் ZAHID HAMIDI பாரிசானிலிருந்து வெளியேறினால் மீண்டும் இணைவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இந்த சூழ்நிலையில் ம.இ.காவும் ம.சீ.சவும் பாரிசானிலிருந்து வெளியேறும் முன்னரே அதன் வலுவான அரசியல் பலத்தை அதன் சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என Ti Lian Ker வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *