ம.சீ.ச & ம.இ.காவுக்குப் பயம்! பாஸ் கட்சியின் ஆதரவாளர்களால் துரத்தப்படுவார்கள்! – அம்னோ நினைவூட்டல்
- Thinagaren Sanggaren
- 07 Sep, 2025
செப்டம்பர் 7,
ம.சீ.ச முன்னாள் உதவித் தலைவர் தீ லியான் கேர் சொல்வது போல பாரிசானிலிருந்து ம.சீ.ச வெளியேறி பெரிக்காத்தானில் சேர்ந்தால் ம.சீ.சவும் ம.இ.காவும் ஒரு வித பயத்துடனே இருக்க வேண்டியிருக்கும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான Datuk Puad Zarkashi தெரிவித்தார். பாரிசானின் மலாய் ஆதரவாளர்கள் போல பாஸ் கட்சியின் மலாய் ஆதரவாளர்கள் இல்லை. இங்கே ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் மலாய்க்காரர்களிடையே கிடைத்த வரவேற்பு என்பது அம்னோ மீதான மலாய்காரர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என Datuk Puad Zarkashi சுட்டிக்காட்டினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெராக்கான்
தலைவர் Datuk Dr Dominic Lau பாஸ் கட்சியினரால் ஓரங்கட்டப்பட்டு கூட்டத்திற்குள்
அனுமதிக்கப்படாமல் துரத்தப்பட்ட சம்பவத்தை ம.இ.காவும் ம.சீ.சவும் மறந்திருக்கமாட்டார்கள்.
அம்னோ அப்படியான அசெளகரியத்தை ஒரு நாளும் ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் வழங்கியதில்லை.
எந்த விதத்தில் ம.இ.காவையும் ம.சீ.சவையும் பாரிசான் ஒதுக்கியிருக்கிறது எனும் கேள்வியையும்
Datuk Puad Zarkashi எழுப்பினார். பெரிக்காத்தானில் உள்ள கட்சிகள்
மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை அளித்தும் ஆதவளித்தும் வருகிறது. கடந்த தேர்தலில் கெராக்கான்
போட்டியிட்ட அனைத்து சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் தோல்வி அடைந்தது. இதற்கான
காரணம் பெரிக்காத்தான் மலாய் ஆதரவாளர்கள் கெராக்கானை ஆதரிக்கவில்லை. இதே நிலை ம.இ.காவுக்கும்
ம.சீ.சவுக்கும் வரும் என Datuk Puad Zarkashi நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



