பாரிசானைப் பிளவுப்படுத்தாதீர்! ம.இ.காவுக்கு நஜீப் அறிவுறுத்தியதாக ம.சீ.ச தகவல்!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak பாரிசான் கூட்டணியைப் பிளவுப்படுத்த வேண்டாம் என ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் அறிவுறுத்தியதாக ம.சீ.ச இளைஞர் பிரிவு தகவல் தொடர்புத் தலைவர் Neow Choo Seong தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நஜீப்பைச் சந்தித்த போது பாரிசானைக் கூறுபோடாமல் இருங்கள் என வேதனையுடன் கேட்டுக்கொண்டதாக Neow Choo Seong தெரிவித்தார். நஜீப் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பல்வேறு கட்சியினரைச் சந்தித்து வருவதை Neow Choo Seong உறுதிப்படுத்தினார்.
முன்னதாகக் கடந்த செவ்வாய்க் கிழமை, நீதிமன்றத்திலேயே ம.இ.காவின் தலைமை நஜீப்புடன் 1 மணி நேரத்திற்கும் மேலாகச் சந்திப்பை நடத்தியதாகச் செய்திகள் கசிந்தன. நேற்று நஜீப்பை நான் சந்தித்த போது பாரிசானின் மரபை உடைத்து எறியும் எந்தவொரு காரியத்தையும் கட்சியினர் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதாக Neow Choo Seong தெரிவித்தார். நஜீப்பிற்காகப் பாரிசானை மீண்டும் வலுப்பெற செய்ய வேண்டிய வேலைகளை முன்னெடுக்க ம.சீ.ச தயாராக இருப்பதாக Neow Choo Seong தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



