பெரிக்காத்தானில் இணைகிறதா ம.இ.கா? நவம்பரில் பதில் சொல்கிறோம்! – ம.இ.கா தலைமை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 19,

இந்திய சமூகத்திடம் செல்வாக்கு மிக்க கட்சியாக ம.இ.கா இருப்பதைப் பாஸ் கட்சி அங்கீகரிப்பதால் ம.இ.கா பெரிக்காத்தானுடன் இணைவது குறித்து வரும் நவம்பரில் நடைபெறும் ம.இ.கா தேசிய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என ம.இ.கா தலைமை தெரிவித்துள்ளது. ம.இ.காவின் மாநிலப் பேரவையில் பெரிக்காத்தானில் இணைவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தேசிய மாநாட்டில் பேராளர்கள் இது குறித்து  முடிவு எடுப்பார்கள் என்றும், தலைமை இதில் தலையிடாது என்றும் பேராளர்களின் பெரும்பான்மையின் அடிப்படையில் பெரிக்காத்தானுடன் இணைவது குறித்து தீர்மானிக்கபடும் என ம.இ.காவின் தலைமை தெரிவித்துள்ளது.

பாஸ் கட்சியும் பெர்சத்து கட்சியும் ம.இ.காவை மதிக்கிறார்கள், அந்த மரியாதையின் வெளிப்பாடாகக் கூட்டணிக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ம.இ.கா தலைமை இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்றும் பாரிசானுடன் ம.இ.கா சுறு சுறுப்பாக இல்லை என்றாலும் உறவு இருப்பதாகவும் ம.இ.காவின்  தலைமை இன்று பகாங்கில் பூர்வக் குடியினரின் மெர்டேக்கா நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *