பாரிசானிலிருந்து வெளியேறாத ம.இ.கா! மரியாதையைக் கேட்டு வாங்கும் ம.இ.கா!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 16,

இன்று நடைபெற்ற ம.இ.காவின் 79 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் பாரிசானிலிருந்து வெளியேறுவது குறித்து அதன் தலைவர் தான் சிறி விக்னேஸ்வரன் எந்தவோர் அறிவிப்பையும் வெளியிடாதது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாரிசானில் தொடர்வதா பிரிவதா என்பதைப் பற்றி ம.இ.காவின் 79 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என சூளுரைத்த ம.இ.காவின் தலைவர் தான் சிறி விக்னேஸ்வரன் தனது உரையில் பாரிசானிலிருந்து வெளியேறுவது குறித்து பேசாமல் பாரிசானிடமிருந்து பட்டங்களையோ பதவிகளையோ ம.இ.கா கேட்கவில்லை, மாறாக மரியாதையைத் தான் கேட்கிறோம் என தெரிவித்தார். தேசிய முன்னணி உருவானது முதல் ம.இ.கா அதன் கூட்டணியில் இருக்கிறது. பாரிசானின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் ம.இ.கா பங்குக் கொண்டிருப்பதைப் பாரிசான் மறக்க கூடாது என்றும் அதன் அடிப்படையில் ம.இ.காவைப் பாரிசான் மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தான் சிறி விக்னேஸ்வரன். 

அதேவேளையில் ம.இ.கா அதன் சமூதாயத்தின் நலன் கருதி மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது எதுவென தீர்மானிக்கவும் முழு உரிமையும் கொண்டிருப்பதாகத் தான் சிறி விக்னேஸ்வரன் தெரிவித்தார். கசப்பான அணுகுமுறைகளுக்கும் ம.இ.காவின் மீதான எதிர்ப்புக் கருத்துகளுக்கும் ம.இ.கா பொறுப்பேற்கவும் முடியாது மன்னிப்பும் கேட்க முடியாது என தான் சிறி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  நாட்டில் தற்போது பல கட்சிகள் உருவாகிவிட்டது. தேர்தலில் 4 முனை 5 முனை போட்டிகள் நிலவுகிறது. ஒரு சமூகத்தை மட்டுமே கொண்டிருக்கும் கட்சி அதன் கூட்டணியின் ஆதரவின்றி வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லாது நிலவும் அரசியல் சூழலில் ம.இ.கா தனித்து இயங்குவது கேள்விக்குறி தான்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *