ம.இ.காவைக் கழட்டி விட்ட ம.சீ.ச! சபா தேர்தலில் களமிறங்கும் ம.சீ.ச!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 7,

2022-இல் அன்வார் தலைமையிலான ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் சட்டமன்றத் தேர்தல்களில் ம.இ.காவும் ம.சீ.சவும் போட்டியிடமாட்டோம் என இரு கட்சிகளும் அறிக்கைகள் விட்ட நிலையில் தற்போது சபாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ம.சீ.ச போட்டியிடும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார். சபாவில் வலுவான கட்சியாக இருக்கும் ம.சீ.ச பாரிசான் சின்னத்தில் போட்டியிடும் என டத்தோஸ்ரீ வீ கா சியோங் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 2023இல் நடைபெற்ற கெடா, கிளாந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ம.இ.காவும் ம.சீ.சவும் தங்களில் பாரம்பரிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்றும் அத்தொகுதிகளில் பாரிசான் வேட்பாளர்களாக மட்டுமே போட்டியிடுவார்கள் என்றும் கூட்டு அறிக்கையை வெளியிட்டது. ஆனால் ம.இ.கா ம.சீ.ச கட்சிகளின் பாரம்பரியத் தொகுதிகளில் பாரிசான் அல்லாத பக்காத்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து அரசாங்கப் பதவிகளில் ம.சீ.ச அங்கம் வகிக்காது என அறிவித்த பின்னர், ம.இ.காவும் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிகள் வகிக்காது என அறிக்கை வெளியிட்டது.

ம.இ.கா ம.சீ.ச தலைமை எடுத்த முடிவில் அதிருப்தி அடைந்த ஒரு சில ம.இ.கா ம.சீ.ச தொகுதித் தலைவர்களும் 6 மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் கட்சியிலிருந்து விலகினர், குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா தலைவரும் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ மாணிக்கம் ம.இ.காவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்தார்கடந்த ஓராண்டாகப் பாரிசான் கூட்டணியிலில் ம.இ.காவும் ம.சீ.சவும் ஒதுக்கப்படுவதாகவும் பாரிசான் கூட்டணியிலிந்து ம.இ.கா வெளியேற வேண்டும் என ம.இ.கா மாநிலப் பேராளர் மாநாட்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி வரும் நிலையில் தற்போது ம.இ.காவை ம.சீ.ச கழட்டிவிட்டு சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் சின்னத்தில் போட்டியிடுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *