ம.இ.கா வெளியேறினால் அன்வாருக்குப் பாதிப்பில்லை! பெரிக்காத்தானுக்குப் பாதிப்பு! நினைவூட்டும் பி.கே.ஆர்!
- Thinagaren Sanggaren
- 11 Nov, 2025
நவம்பர் 11,
ம.இ.கா அதன் அரசியல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ம.இ.கா அரசாங்கத்தின் ஆதரவுக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் அன்வாரின் ஆட்சிக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என கோத்தா ராஜா பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவரும் பி.கே.ஆரின் தேசிய இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளருமாகிய Afif Abdullah தெரிவித்தார். ம.இ.கா எந்த கட்சிக் கூட்டணியுடன் இருக்கிறது என்பதை விடவும் ம.இ.கா மக்களின் குரலாக இயங்குகிறதா என்பதே முக்கியம் என அவர் தெரிவித்தார்.
ம.இ.கா பெரிக்காத்தானுடன் இணைந்தால் அது பெரிக்காத்தானுக்குத் தான் ஆபத்து என்றும் இதனால் பெரிக்காத்தானில் இருக்கும் இந்திய கட்சிகளுக்கும் இந்திய ஆதரவாளர்களுக்கு மட்டுமே ம.இ.காவின் பெரிக்காத்தான் வருகை சிக்கலாக அமையும் என Afif Abdulla தெரிவித்தார். குறை பழகத்தை விட்டுவிட்டு ம.இ.கா அதன் அரசியல் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். பெரிக்காத்தானில் இணைவதா இல்லையா என்பது குறித்து ம.இ.கா முடிவெடுக்க முழு உரிமையும் உள்ளது என்றாலும் அதன் அரசியல் எதிர்காலத்தை ம.இ.கா சிந்தித்து செயல்பட வேண்டுமென பி.கே.ஆரின் தேசிய இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளருமாகிய Afif Abdullah தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



