ம.இ.காவை அரவணைக்கும் பெரிக்காத்தான்! – ம.இ.காவை வரவேற்கும் பெரிக்காத்தான் இந்தியத் தலைவர்கள்!
- Thinagaren Sanggaren
- 04 Aug, 2025
ஆகஸ்ட் 4,
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து ம.இ.கா வெளியேறி பெரிகாத்தானில் இணையும் சூழல் ஏற்பட்டால் பாஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது என பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மன்றத் தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். அக்டோபரில் நடைபெறும் ம.இ,காவின் பொதுக்கூட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கலாமா இல்லை என ம.இ.கா முடிவெடுக்கும் என ம.இ.காவின் சரவணன் தெரிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியின் இந்திய பிரதிநிதிகள் ம.இ.காவை வரவேற்பார்களா என்பதிலும் தனக்கு சந்தேகம் இருந்தாலும் பாஸ் கட்சியின் DHPP வரவேற்கும் என அதன் தலைவர் DR Balachandran Gopal Krishnan தெரிவித்தார்.
ம.இ.காவுடன் பெரிக்காத்தான் ஒத்துழைப்பது புதிதல்ல. முந்தைய காலத்திலும் முகைதீன் பிரதமராக இருந்த போதும் அமைச்சரவையில் ம.இ.கா அங்கம் வகித்திருந்ததை பாஸ் கட்சியின் DHPP தலைவர் DR Balachandran Gopal Krishnan நினைவூட்டினார். மீண்டும் ம.இ.காவுடன் இணைவது என்பதில் சிக்கல் இருக்காது என்றாலும் பெரிக்காத்தானின் தலைமையும் ம.இ.காவின் தலைமையும் இது குறித்து முழுமையாக ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என பாஸ் கட்சியின் DHPP தலைவர் DR Balachandran Gopal Krishnan வலியுறுத்தினார்.
அதே வேளையில் பெரிக்காத்தானின் அரசியல் கொள்கைகளை ம.இ.கா ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு சமரசமுமில்லாமல் ம.இ.கா ஏற்றுக் கொண்டால் மட்டுமே ம.இ.காவுடனான ஒத்துழைப்பு நீண்ட காலம் நீடிக்கும் என பாஸ் கட்சியின் DHPP தலைவர் DR Balachandran Gopal Krishnan ம.இ.காவுக்கு நினைவூட்டினார். பாரிசானில் ம.இ.கா பல காலமாக ஒதுக்கப்பட்டு வருவதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் ம.இ.கா எப்பவோ பெரிக்காத்தானில் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் பாஸ் கட்சியின் DHPP தலைவர் DR Balachandran Gopal Krishnan சுட்டிக்காட்டினார். இது தாமதமான கூட்டணியாக இருந்தாலும் இந்த கூட்டணி நீண்ட காலம் இருக்க வேண்டும் என பாஸ் கட்சியின் DHPP தலைவர் DR Balachandran Gopal Krishnan வலியுறுத்தினார்,
இதற்கிடையில் பெரிக்காத்தானின் இந்தியர்களின் மற்றொரு கூட்டணிக் கட்சியான MIPP கட்சியின் தலைவர் புனிதனும் ம.இ.காவின் தலைமையுடன் நல்ல ஒத்துழைப்பில் இருப்பதாகவும் ஒன்றிணைந்து செயல்படுவதில் சிக்கலேதுமிருக்காது என்றும் தெரிவித்திருந்தார். ம.இ.காவின் தலைமையுடன் அணுக்கமான உறவைத் தாம் இன்றும் கடைப்பிடித்து வருவதைப் புனிதன் நினைவூட்டினார். பெருசத்துவின் இணை கூட்டணிப் பிரிவுத் தலைவரான சஞ்சீவனும் ம.இ.கா பெரிக்காத்தான் இணைவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என தெரிவித்தார். இந்தியர்களின் நம்பிக்கையை இழந்த ம.இ.கா சமீபக் காலமாக இந்தியர்களிடத்தில் இழந்த நம்பிக்கையை மீட்டு வருகிறது. அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க ம.இ.கா ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், ம.இ.கா பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவது சாத்தியப்படுமா என பெரிக்காத்தான் தலைமையுடனான பேச்சுவார்த்தை முடிவு செய்யும் என்றும் ஆனால் பெரிக்காத்தானின் இந்தியத் தலைவர்கள் ம.இ,காவின் வருகையைத் தடுக்கமாட்டார்கள் என்றும் பெருசத்துவின் சஞ்சீவன் நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



