ம.இ.கா & ம.சீ.ச பாரிசானிலிருந்து வெளியேறினால் பாஸ் கட்சி ஆதரவு வழங்க தயார்! – ஆனால்?
- Thinagaren Sanggaren
- 05 Aug, 2025
ஆகஸ்ட் 5,
பாரிசான் கூட்டணியில் நீடிக்கலாமா வேண்டாமா என ம.இ.காவும் ம.சீ.சவும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அப்படி அவர்கள் வெளியேறினால் அவர்களைப் பெரிக்காத்தானில் இணைக்க பாஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் பாஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான Hashim Jasin தெரிவித்தார். ம.இ.காவும் ம.சீ.சவும் பாரிசான் கூட்டணியிலிருந்து வெளியேறினால் மட்டும் போதாது. ஒற்றுமை கூட்டணிக்கு அவர்கள் வழங்கியிருக்கும் ஆதரவையும் மீட்டுக்கொண்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு வலுவான எதிர்ப்பாகக் கருதப்படும் என பாஸ் கட்சியின் Hashim Jasin வலியுறுத்தினார்.
ம.இ.காவுடனும் ம.சீ.சவுடனும் பாஸ் கட்சிக்கு எந்தவொரு பகைமையும் இருந்ததில்லை என்பதால் கூட்டணிக் குறித்து அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய அவசியமிருக்காது என பாஸ் கட்சியின் Hashim Jasin சுட்டிக்காட்டினார். ஆனால் பாரிசானிலிருந்து மட்டும் வெளியேறி அரசாங்கத்தை ஆதரிக்கும் எண்ணத்தை ம.இ.காவும் ம.சீ.சவும் கொண்டிருந்தால் அது எதிர்க்கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என Hashim Jasin நினைவூட்டினார். முழுமையாக ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறி பெரிக்காத்தானில் இணையும் சாத்தியங்களை ம.இ.காவும் ம.சீ.சவும் எண்ணம் கொண்டிருந்தால் மட்டுமே இந்த கூட்டணி வலுவாக இருக்கும் என Hashim Jasin விவரித்தார்.
அடுத்த 16 ஆவது பொதுத்தேர்தலுக்காக இப்போதே பெரிக்காத்தான் வலுவான கூட்டணியை அமைக்கும் எண்ணத்தில் இருப்பதால் ம.இ.காவும் ம.சீ.சவும் இணைவதில் சிக்கல் இருக்காது. ஆனால் தேர்தல் நெருங்கிய பின்னர் பெரிக்காத்தானுடன் இணையும் எண்ணத்தை ம.இ.காவும் ம.சீ.சவும் வெளிப்படுத்தினால் அது பெரிக்காத்தானின் கூட்டணிக்குள்ளேயே பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ம.இ.காவும் ம.சீ.சவும் விரைந்து அவர்களின் முடிவை வெளிப்படையாக எந்தவொரு தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான Hashim Jasin வலியுறுத்தி
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



