ம.இ.காவைப் பெரிக்காத்தானில் ஏற்கிறோம்! இன்றிரவு ம.இ.கா தலைவரைச் சந்திக்கும் பெரிக்காத்தான்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 17,

பாரிசானின் உறுப்புக் கட்சியான ம.இ.கா பெரிக்காத்தானில் இணைவதற்காக அனுப்பிய கடிதத்தைப் பெரிக்காத்தான் தலைமை ஏற்றுக் கொண்டதாகப் பெரிக்காத்தானின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan இன்று தெரிவித்தார். முன்னதாகப் பெரிக்காத்தானில் இணைவது தொடர்பாக ம.இ.காவின் தலைமையிடமிருந்து பெரிக்காத்தான் விண்ணப்பக் கடிதம் பெற்றதாகவும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் ம.இ.காவின் விண்ணப்பத்தைப் பெரிக்காத்தான் தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் Datuk Seri Takiyuddin Hassan உறுதிப்படுத்தினார். 

ம.இ.கா பெரிக்காத்தானில் இணைவது குறித்தான இறுதிக்கட்ட பணிகள் தொடர்பாக இன்றிரவு ம.இ.காவின் தலைவர் Tan Sri S A Vigneswaran-ஐ நேரில் சந்திக்கவிருப்பதாகவும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். உண்மையில் ம.இ.காவின் விண்ணப்பத்தைப் பெரிக்காத்தான் கடந்த டிசம்பர் மாதமே ஏற்றுக் கொண்டு அதனை அங்கீகரித்தது. பெரிக்காத்தானின் உச்சமன்றக் கூட்டத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் ம.இ.காவுடன் மேலும் 5 கட்சிகள் பெரிக்காத்தானில் இணைவதற்கான விண்ணப்பத்தை வழங்கியிருந்த நிலையில் அதனையும் பெரிக்காத்தான் அங்கீகரித்துள்ளதாகவும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். 

பெரிக்காத்தான் கூட்டணியில் PAS, BERSATU, GERAKAN, MIPP ஆகிய கட்சிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டாலும் தற்போது புதிதாக இணையும் ம.இ.காவுக்கும் பெரிக்காத்தானின் கூட்டணியில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என Datuk Seri Takiyuddin Hassan ம.இ.காவுக்கு உறுதியளித்தார். பெரிக்காத்தானில் உறுப்புக் கட்சியாகவும் இருக்கலாம், ஆதரவுக் கட்சியாகவும் இருக்கலாம் என்பதால் அரசியல் கட்சிகள் பெரிக்காத்துடன் எந்த வகையில் ஒத்துழைக்கவுள்ளனர் என்பது அந்தந்த அரசியல் கட்சிகள் முடிவெடுக்கலாம் என Datuk Seri Takiyuddin Hassan விளக்கமளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *