பகாங்கில் பாஸ் கட்சியுடன் இணையும் ம. இ. கா?

top-news
FREE WEBSITE AD

 மார்ச்22,

 பகாங்கில் பாஸ் கட்சியுடன் ம.இ.கா இணையவிருப்பதாக பகாங் மாநில பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Datuk Rosli Abd Jabar தெரிவித்துள்ளார். பகாங்கில் உள்ள சபாய் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்  V.Arumugam பாஸ் கட்சியுடன் நல்ல தொடர்பில் இருப்பதாகவும் Datuk Rosli Abd Jabar சுட்டிக்காட்டினார். அண்மையிலும் ம. இ. காவின் சபாய் சட்டமன்ற உறுப்பினரான ஆறுமுகத்தை santhirtoom பாஸ் கட்சியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் நல்ல பதில் வரும் என நம்புவதாக பகாங் மாநில பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் Datuk Rosli Abd Jabar தெரிவித்துள்ளார்.

பகாங்கில் 42 சட்டமன்றங்கள் உள்ள நிலையில் தற்போது பாரிசான் 17 சட்டமன்றங்களையும் பக்கத்தான் 8 சட்டமன்றங்களையும் கைவசம் வைத்துள்ளது. பாஸ் கட்சி 17 சட்டமன்றங்களை கைவசம் வைத்துள்ளது. தற்போது பாரிசான் பக்கத்தான் கூட்டாட்சி அமைந்திருக்கும் நிலையில் பாஸ் கட்சியுடன் ம. இ. கா இணைந்தாலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பாஸ் கட்சிக்கு கிடைக்காது. ஆனாலும் பாஸ் கட்சியுடன் இணைவது குறித்து ம. இ. காவின் தலைமை எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. முன்னதாக பாஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் பெரிக்காதான் பொதுச்செயலாளருமான Datuk Seri Takiyuddin Hassan  ம. இ. காவை PERIKATAN உறுப்புக் காட்சியாக ஏற்றுக்கொள்ள PERIKATAN முடிவு செய்துள்ளதாகவும் PERIKATAN- இல் இணைவதற்கான விண்ணப்பத்தை  ம. இ. கா முன்னதாக வழங்கியதாகவும் தெரிவித்தார். இதற்கு  ம. இ. காவின் தலைமையிடமிருந்து எந்தவொரு பதிலும் இதுவரையும் வரவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *