பெரிக்காத்தானுடன் பேச்சுவார்த்தை! ஒப்புக்கொண்ட ம.இ.கா!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 17,

பெரிக்காத்தான் தலைமையுடன் ம.இ.கா சந்திப்பை நடத்தியிருப்பதை ம.இ.கா தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. பாரிசானுக்கு வெளியே உள்ள ஆதரவுகளை எடை போட ம.இ.கா தயாராகியதும் பெரிக்காத்தானுடன் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகளை நடத்தியதாக ம.இ.கா தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. கெடா , பினாங்கு ஆகிய மாநில ம.இ.கா மாநாட்டில் பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேற வேண்டும் என ம.இ.காவின் அடிப்படை உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றிய நிலையில் பெரிக்காத்தானுடன் சந்திப்பை நடத்தியதாக ம.இ.கா தலைமை தெரிவித்துள்ளது. 

இது ம.இ.காவின் எதிர்காலம் தொடர்பானது. நிலையான எதிர்காலத்தை ம.இ.கா கொண்டிருக்க விரும்புகிறது. அதனால் எந்தவொரு தரப்புடனும் ம.இ.கா சந்திப்பை நடத்த விரும்புகிறது. பெரிக்காத்தானுடன் ம.இ.கா நடத்திய சந்திப்புகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பெரிக்காத்தானுடனான பேச்சு வார்த்தைகள் அதிகாரப்பூர்வமானவைக் கிடையாது என்றும் ம.இ.கா தலைமை தெரிவித்துள்ளது. பழமையான அரசியல் கொள்கைகளுடன் எந்தவோர் அரசியல் கட்சியும் தொடர முடியாது, இது ம.இ.காவின் அடிப்படை உறுப்பினர்கள் ம.இ.காவின் அடித்தட்டு தொண்டர்களின் விருப்பம். அவர்களுக்கான கட்சி என்பதால் அரசியல் மாற்றத்தை ம.இ.காவும் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படுவதாக ம.இ.கா தலைமை தெரிவித்துள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *