ம.இ.கா அசோஜனுக்கு எதுவும் தெரியாது! என் தொகுதியில் ம.இ.காவே இல்லை! – PUAD ZARKASHI பதிலடி!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 18, 

பாரிசானிலிருந்து விலகினாலும் அன்வாரை ஆதரிப்பதாக ம.இ.கா தெரிவித்திருப்பது பக்காத்தானில் இணைவதற்கான ஒரு சமிஞ்சை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் DATUK PUAD ZARKASHI தெரிவித்தார். முதலில் பெரிக்காத்தானில் இணைவதாகக் குறிப்பிட்ட ம.இ.கா இப்போது அன்வாரை ஆதரிப்பதாகத் தெரிவிக்கிறார். இப்படிதான் TENGKU ZAFRUL செய்தார். பாரிசானிலிருந்து விலகி இப்போது பி.கே.ஆரில் இணைந்திருக்கிறார் என DATUK PUAD ZARKASHI தெரிவித்தார். ம.இ.கா குறித்து நான் கருத்து தெரிவிப்பதால் ம.இ.கா உதவித் தலைவர் அசோஜன் என்னை சாடுகிறார். என்னுடைய சட்டமன்றத்தில் இந்தியர்களைக் கவனிக்கவில்லை என அசோஜன் புலம்புகிறார். 

என்னுடைய Rengit சட்டமன்றத்தில் எத்தனை இந்திய வாக்காளர் இருக்கிறார்கள் என அசோஜனுக்குத் தெரியுமா? எனக்கு தெரியும். 79 இந்திய வாக்காளர் என்னுடைய சட்டமன்றத்தில் உள்ளனர். அவர்களுக்கான உதவிகளை நானே செய்தும் வருகிறேன். என்னுடைய சட்டமன்றத்திற்கு அருகில் உள்ள Senggarang சட்டமன்றத்தில் அதிகமான இந்தியர்கள் இருப்பதால் என்னுடைய சட்டமன்றத்திற்காக வழங்கப்படும் இந்தியர்களுக்கான உதவிகளை Senggarang சட்டமன்றத்திற்குப் பகிர்கிறேன். இதெல்லாம் ம.இ.காவுக்குத் தெரியாது. ஏனென்றால் ஜொகூர் ம.இ.காவின் தலைவராக இருக்கும் அசோஜன் என்னுடைய Rengit சட்டமன்றத்தின் பக்கமே வந்ததில்லை. இது நாள் வரையும் Rengit சட்டமன்றத்தில் ம.இ.காவின் தொகுதியே இல்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் DATUK PUAD ZARKASHI அசோஜனுக்குப் பதலடிக் கொடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *