பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறுவது உறுதி! சரவணன் சொன்னதாக அம்னோ வாக்குமூலம்!
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2025
அக்தோபர் 22,
வரும் நவம்பர் மாதம் பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறுவதை ம.இ.காவின் சரவணன் தம்மிடம் தெரிவித்ததாக அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு தாம் சரவணன் வீட்டிற்குச் சென்றதாகவும் அச்சந்திப்பில் சரவணன் தம்மிடம் ம.இ.கா பாரிசானிலிருந்து வெளியேறவிருக்கும் கட்சியின் முடிவைத் தம்மிடம் தெரிவித்ததாகவும் Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார். நான் அவரிடம் ஏன் என கேட்டே, அதற்கு சரவணன் பல காரணங்களை அதிருப்தியுடன் தெரிவித்தார். அவர் அதிருப்தியில் அரசியல் நியாயங்கள் உள்ளது என Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார்.
மேலும் நவம்பர் மாதம் பெரிக்காத்தானில் இணைவது குறித்தும் ம.இ.காவின் எதிர்காலம் குறித்தும் அடுத்த பொதுத்தேர்தலில் ம.இ.கா அதன் வலிமையை இழக்காமல் இருக்க ஒரு சில நகர்வுகளை ம.இ.கா கொண்டிருப்பதாகவும் சரவணன் தெரிவித்ததாக Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார். ஆனால் ம.இ.கா அதன் முடிவை மறுபரீசலனை செய்ய வேண்டும் என Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார். பாரிசான் வளர்ச்சியில் ம.இ.காவும், ம.இ.காவின் வளர்ச்சியில் பாரிசானும் பெரும்பங்காற்றியுள்ளனர். இதனை மனதில் வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதை ம.இ.கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என Datuk Seri Tajuddin Abdul Rahman வேண்டுகோள் விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



