முச்சந்தியில் ம.இ.கா! எங்கே போவார்கள்? ம.இ.காவைக் கடுமையாகச் சாடிய அம்னோ!
- Thinagaren Sanggaren
- 16 Dec, 2025
டிசம்பர் 16,
ம.இ.கா இப்போது முச்சந்தியில் நின்றுக் கொண்டு எந்த பக்கம் போவது என தெரியாமல் இருப்பதால் அவதூறுகளைப் பரப்பி வருவதாக ஜொகூர் மாநிலச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார். ம.இ.காவுக்கு 4 முனைகளில் செல்லவும் வாய்ப்பு உண்டு என்றாலும் அவர்கள் எந்த பக்கம் திரும்ப போகிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார். ம.இ.கா எனும் அரசியல் கட்சி பாரிசான் தலைமையை ஏற்றுக்கொண்ட கூட்டணி கட்சி என்பதை அவர்கள் அறிய வேண்டும். கூட்டணிக் கட்சிகளே பாரிசானுக்கு எதிராகப் பேசுவதை என்னவென்று சொல்வது? குறிப்பாக ZAHID HAMIDI தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என ம.இ.காவினர் சாடுகிறார்கள்.
கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மாமன்னரின் ஆலோசனைக்கு இணங்கி பக்காத்தானுடன் பாரிசான் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது. பாரிசான் தலைவர் ZAHID HAMIDI தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல இது. பாரிசான் தலைமை எடுத்த முடிவு. பாரிசான் தலைமையில் ம.இ.காவும் இருக்கிறது என்பதை ம.இ.கா உணர வேண்டும். ம.இ.கா உடனடியாக முடிவெடுப்பது ம.இ.காவுக்கும் நல்லது பாரிசானுக்கும் நல்லது. ம.இ.கா பெரிக்காத்தானில் இணைய இணக்கம் தெரிவித்து பெரிக்காத்தானுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அக்கடிதம் கசிந்ததும் ம.இ.காவிற்குத் தடுமாற்றம் என ஜொகூர் மாநிலச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



