அடிப்பட்ட ம.இ.கா! பாரிசானிலிருந்து விலகி; பெரிக்காத்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!
- Thinagaren Sanggaren
- 16 Nov, 2025
நவம்பர் 16,
பாரிசானிலிருந்த ம.இ.கா விலகலாம் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில், இன்று நடைபெற்ற ம.இ.காவின் 79-வது பேராளர் மாநாட்டில் அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ம.இ கா. பாரிசானிலிருந்து விலகி பெரிக்காத்தானுடன் பேச்சுவார்த்தையை நடத்த கட்சியின் சட்டத்தை மாற்றியமைத்திருப்பதுடன், பாரிசானிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கான தீர்மானத்தை இன்று 79 ஆவது ம.இ.கா பேராளர் மாநாட்டில் நிறைவேற்றியது. இது ம.இ.காவின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் என்பதால் ம.இ.கா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இன்று பாரிசானிலிருந்து விலகி, நாளை பெரிக்காத்தானில் இணைந்து விட முடியாது என்பதால் அடுத்தக்கட்டமாகப் பெரிக்காத்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதால், அப்படியான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ம.இ.காவின் பேராளர்களின் குரலாக அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனை நியமிப்பதாக ம.இ.காவின் துணைத் தலைவர் சரவணன் தெரிவித்தார்.
தான் சிறி விக்னேஸ்வரன் பிரதமர் அன்வாரைச் சந்தித்ததாகவும் அப்போது அன்வார் ம.இ.காவின் செனட்டராகத் தான் சிறி விக்னேஸ்வரனுக்குப் பதவி வழங்குவதாகவும் தெரிவித்தாலும் தனக்கு பதவி வேண்டாம் ம.இ.காவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சரவணனுக்குப் பதவி வழங்காமல் எனக்கு பதவி வேண்டாம் என தான் சிறி விக்னேஸ்வரன் மறுத்ததாகவும் இது தனக்கும் தெரியும் என்றும் சரவணன் தெரிவித்தார். திருத்தம் செய்யப்பட்ட ம.இ.காவின் மத்திய சட்டதிருத்தம் வரையறுக்கபட்ட் பின்னர் பெரிக்காத்தானுடன் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இது ம.இ.காவின் தொண்டர்களுடைய முழு ஒத்துழைப்பால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் சரவணன் கூறினார்.
இன்றைய மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பேராளர்கள் தீர்மானத்தில் பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறுவதற்கானச் சட்டத்திருத்தம் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.இ.காவின் பேராளர் மாநாட்டில் 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாரிசானுடனானக் கூட்டணியைத் தொடர்வது குறித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இத்தீர்மானத்தின் அடிப்படையில் பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறும் போது சட்டச் சிக்கல்களை ம.இ.கா எதிர்நோக்காது. எனவே பெரிக்காத்தான் போன்ற பிற கூட்டணியுடன் வெளிப்படையாக அரசியல் பங்களிப்புகள் குறித்து கலந்துரையாடலை ம.இ.கா நடத்த முடியும். அதேபோல் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் 100% ஆதரவளிக்க வேண்டும் என்றும், தலைவர் துணைத் தலைவர் எடுக்கும் முடிவைக் கட்சியின் தொண்டர்கள் 100% முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



