மலாக்காவில் இத்தாலி AW149 ஹெலிகாப்டர் தொழிற்சாலை: பாதுகாப்பு அமைச்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை – அட்லி ஜாஹாரி
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 1-
மலாக்கா மாநிலம், பத்து பெரெண்டாமில் உள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் (LTAM) இத்தாலியின் லியோனார்டோ நிறுவனம் AW149 ரக ஹெலிகாப்டர்களை இணைக்கும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற வினாவிற்கு பதிலளித்த துணைப் பாதுகாப்பு அமைச்சர் அட்லி ஜாஹாரி, இத்திட்டம் முழுமையாக மலாக்கா மாநில அரசு, இத்தாலியின் லியோனார்டோ நிறுவனம், வெஸ்ட்ஸ்டார் ஏவியேஷன் சொந்த நிறுவனம் ஆகிய தனியார் ஒப்பந்தமே தவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சு இதில் ஈடுபடவில்லை என்றார்.
“இது அரசு நிறுவனங்களுக்கு 28 AW149 ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான குத்தகை ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும். ஒப்பந்தப்படி, ஹெலிகாப்டர்களை வழங்கும் நிறுவனமே உள்நாட்டில் இணைப்புத் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது” என்று அவர் விளக்கினார்.
மலாக்கா மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், உள்ளூர் விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் புதிய வேலைவாய்ப்புகளையும் முதலீட்டையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



