பழனி கோவில் நில முறைகேடு: 100 சதவீதம் நடவடிக்கை உறுதி – அமைச்சர் நிர்மல்குமார்
- Surendran Sumdraraj
- 18 Jul, 2026
சென்னை, ஜூலை 18-
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள விவகாரத்தில், தொடர்புடையவர் மீதும் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் எந்தவித அதிகார மையங்களும் இல்லை என்றும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் கூறினார்.
இந்த நிலப் பதிவு தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் துணைப் பதிவாளர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து அரசு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



