பெரிக்காத்தானில் இந்தியர்களுக்கு அங்கீகாரம்! MIPP புனிதன் பெருமை!
- THINAGAREN SANGGAREN
- 16 Mar, 2026
மார்ச் 16,
புதிய பெரிக்காத்தான் தலைமையில் மலேசிய இந்திய மக்கள் கட்சி எனப்படும் MIPP கட்சிக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பதால் இந்தியர்களை அங்கீகரிக்கும் கூட்டணிக் கட்சியாகப் பெரிக்காத்தான் நிரூபித்துள்ளதாக MIPP கட்சியின் புனிதன் பரமசிவன் பெருமையாகத் தெரிவித்துள்ளார். திரங்கானு மெந்திரி பெசார் Dato’ Seri Dr Ahmad Samsuri Mokhtar தலைமையிலான புதிய பெரிக்காத்தான் மலர்ந்திருப்பதாகவும் பெரிக்காத்தான் கூட்டணியில் MIPP கட்சியின் 3 செயற்குழு உறுப்பினர் தேசிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் MIPP கட்சியின் புனிதன் பரமசிவன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக MIPP கட்சியின் Dato’ Sivakumar Krishnan பெரிக்காத்தான் கூட்டணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பகாங் மாநில ம.இ.காவிலிருந்து விலகிய Dato’ Sivakumar Krishnan தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சி எனப்படும் MIPP கட்சியில் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். புதிய பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவராகப் பாஸ் கட்சியின் திரங்கானு மெந்திரி பெசார் Dato’ Seri Dr Ahmad Samsuri Mokhtar அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தானின் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முகைதீன் யாசி பெரிக்காத்தானின் முதல் துணைத் தலைவராகவும், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் DATO SRI TUAN IBRAHIM TUAN MAN இரண்டாவது துணைத் தலைவராகவும் கெராக்கான் கட்சியின் தலைவர் DATUK DOMINIC LAU மூன்றாவது துணைத் தலைவராகவும் MIPP கட்சியின் தலைவர் PUNITHAN PARAMSIVEN நான்காவது துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
பெரிக்காத்தானின் புதிய பொதுச் செயலாளராகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin bin Hassan நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராகக் கெர்க்கானின் Wong Chia Zhen, மற்றொரு துணைச் செயலாளராகப் பெர்சத்துவின் Dato’ Seri Azmin Ali, மற்றொரு துணைச் செயலாளராக MIPP கட்சியின் Dato’ Sivakumar Krishnan நியமிக்கப்பட்ட நிலையில் பொருளாளராகக் கெடா மாநில மெந்திரி பெசார் Dato’ Seri Muhammad Sanusi Nor நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



