பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் முகைதீன் மட்டுமே! – MIPP PUNITHAN
- Thinagaren Sanggaren
- 22 Sep, 2025
செப்டம்பர் 22,
பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்
Tan Sri Muhyiddin Yassin மட்டுமே என்பதில் பெரிக்காத்தானின் கூட்டணிக்
கட்சியான MIPP கட்சியின்
தலைவர் புனிதன் பரமசிவம் தெரிவித்தார். பெரிக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளுக்கு அதன்
பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் உரிமை உள்ளது என்றாலும் நம்பகமான தலைமைத்துவ அனுபவமிக்க
ஒரு தலைவர் வேண்டும் என்றால் பிரதமராகவும் முக்கிய அமைச்சராகவும் பொறுப்பிலிருந்து
நிரூபித்த Tan Sri Muhyiddin Yassin பிரதமர் வேட்பாளராகும் தகுதி உடையவர் என
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் Punithan Paramsiven தெரிவித்தார்.
MIPP கட்சி பிரதமர் வேட்பாளரை முன்மொழியாது என்பதில்
உறுதியாக இருப்பதாகவும் ஆனால் பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளராக முகைதீனைத் தவிர்த்து
மற்ற தலைவர்களை அங்கீகரிக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் Punithan Paramsiven தெரிவித்தார்.
பெரிக்காத்தான் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டதும் MIPP எனும்
மலேசிய இந்தியர் மக்கள் கட்சி இந்தியர் சமூகத்தைப்
பிரதிநிதிப்படுத்தும் முக்கிய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் என்பதில் சமரசம் செய்துக்
கொள்ளாது என மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் Punithan Paramsiven தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



