MIPP கட்சியின் PERLIS, KEDAH, PERAK புதிய தலைவர்கள் நியமனம்!
- Thinagaren Sanggaren
- 04 Jan, 2026
ஜனவரி 4,
பெரிக்காத்தானில் இந்தியர்களுக்கான அரசியல் கட்சியாக இருக்கும் MIPP கட்சி பெர்லிஸ், பேராக், கெடா ஆகிய 3 மாநிலங்களில் அதன் கட்சியைப் பரப்பும் நோக்கத்தில் புதிய தலைமையிலான மாநிலங்கவையை உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 2 பேராக்கின் MIPP தலைவராக SATHIA BALAவும் நேற்று பெர்லிஸ் MIPP தலைவராக ARUNASALAMமும் நியமிக்கப்பட்டனர்.
கெடா MIPP தலைவராக VIMALAN பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மலேசிய இந்திய மக்கள் கட்சி எனும் MiPP கட்சியை அனைத்து மாநிலங்களிலும் படர்ந்த ஆளுமை மிக்க கட்சியாகப் பரப்ப இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு என பல கிளைகளையும் உருவாக்க இந்த மாநிலங்கவை பொறுப்புகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடா, பெர்லிஸ், பேராக் ஆகிய மாநிலத் தலைவர்களுக்கான நியமனக் கடிதத்தை MiPP கட்சியின் தேசியத் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணியின் உதவித் தலைவருமான P. Punithan நேரடியாக வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



