இந்தியர்களை ஏமாற்றிய ராமசாமி! அவர் ஒரு சந்தர்ப்பவாதி! – MIPP சாடல்!
- Thinagaren Sanggaren
- 02 Aug, 2025
ஆகஸ்ட் 2.
டி.ஏ.பியிலிருந்து வெளியேறிய ராமசாமி ஒரு சந்தர்ப்பவாதி என்றும் அவர் உண்மையான ஒரு தலைவராக இருக்க தகுதியற்றவர் என்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் S Subramaniam சாடினார். அன்வாருக்கு எதிரான மனப்பான்மைக் கொண்டிருக்கும் இந்தியர்களை எதிர்க்கட்சியின் பக்கம் இழுக்க MIPP கட்சி தவறவிட்டதாக ராமசாமியின் உரிமைக் கட்சியினர் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என S Subramaniam தெரிவித்தார்.
ராமசாமி ஒரு சந்தர்ப்பவாதி. டி.ஏ.பியில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதற்காக அவர் டி.ஏ.பியிலிருந்து வெளியேறினார் என உரிமை கட்சியினர் பாசாங்கு செய்து வருகின்றனர். ஆனால் பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தேர்தலில் டி.ஏ.பி கட்சி ராமசாமியை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பதால் டி.ஏ.பியிலிருந்து ராமசாமி வெளியேறினார் என்பது தான் உண்மை என S Subramaniam சுட்டிக்காட்டினார்.
மலேசியா முழுவது 30% முதல் 35% விழுக்காட்டு இந்தியர்கள் பெரிக்காத்தானுக்கு ஆதரவளிக்க MIPP கட்சியினர் முக்கிய பங்கையாற்றியுள்ளதாகவும் பெரிக்காத்தானில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியாக மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP திகழ்கிறது என்று அதன் தேசியத் துணைத் தலைவர் S Subramaniam தெரிவித்தார். உரிமை கட்சி என்பது இன்னும் பதிவு செய்யப்படாத ஓர் இயக்கமாகவே இருக்கிறது. ஆனால் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அங்கீகாரம் பெற்ற பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சியாக இருப்பதை S Subramaniam சுட்டிக்காட்டினார். அடுத்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் போது மலேசிய இந்தியர்களுக்காக மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP ஆட்சியில் அங்கீகாரத்துடன் இருக்கும் என்பதை S Subramaniam வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Thanabalan
No comments



