வியர்வைத் துளிகளை வெற்றியாக்கத் துடிக்கும் அமீஷன்ராஜ்!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, ஆக. 16-

தேசிய ஸ்குவாஷ் வீரர் சி. அமீஷன்ராஜ், வெற்றிக்கு எளிய வழி இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர். இதனாலேயே, பருவ இடைவேளையிலும் தனது பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு, வியர்வையை வெற்றியாக மாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளார். 21 வயதாகும் இந்த இளம் வீரர், தனது கடின உழைப்புக்கான பலனை பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டியில், அமீஷன்ராஜ் ஹரித் டேனியலுக்கு எதிராக விளையாடி முத்திரை பதித்தார். மும்பையில் நடந்த இந்திய ஓபன் காலிறுதி போட்டியில், ரமித் டாண்டனை இரண்டு செட்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு, அபாரமாக வெற்றி
பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வெற்றி அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிஸ்டலில் பயிற்சி பெற்று, தனது திறனை மேம்படுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு டாலியனில் நடந்த ஆசிய அணி சாம்பியன்ஷிப்பில், முதல் முறையாக பங்கேற்று, ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல், மலேசிய அணிக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இவர் உலக தரவரிசையில் 130ஆவது இடத்தில் உள்ளார்.

அணி போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் அணி வீரர்களின் ஆதரவு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது என்று அமீஷன்ராஜ் கூறினார். அவரது பயிற்சியாளர்கள் ஷரில் ஷாஹிடான், நபீஸ்வான் அத்னான், இவரது மனோதிடத்தை பாராட்டியுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *