உள்நாட்டு தயாரிப்புப் பயன்பாட்டை உறுதி செய்ய NIF மூலம் புதிய கண்காணிப்பு – MITI
- Tamil Malar (Reporter)
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 4-
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு (MITI), புதிய ஊக்கத் தொகை கட்டமைப்பு எனப்படும் Kerangka Insentif Baharu (NIF) மூலம் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட அளவீடு மற்றும் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டு திட்டங்களில் உள்நாட்டு தயாரிப்புகள் பயன்படுத்தப்படுவது உண்மையாகவே நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
MITI துணை அமைச்சர் சிம் ஸே சின், இந்த புதிய அணுகுமுறை வெளிநாட்டு முதலீடு (FI) மற்றும் உள்நாட்டு முதலீடு (DI) திட்டங்களில் உள்நாட்டு தயாரிப்புப் பயன்பாடு தொடர்பான உறுதிமொழிகள் இனி வெறும் அறிவிப்பாக மட்டுமே இல்லாமல், நடைமுறையில் செயல்பட வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகக் கூறினார்.
NIF கட்டமைப்பின் கீழ் உள்நாட்டு தயாரிப்புப் பயன்பாட்டின் உண்மை நிலை அளவிடப்படும். இதில் மூலப்பொருட்கள், கூறுகள், இயந்திரங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தும் சதவீதம் போன்ற அளவிடக்கூடிய (quantitative) மற்றும் தரமான (qualitative) குறியீடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், உள்ளூர் நிறுவனங்கள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) வழங்கல் சங்கிலியில் எவ்வளவு அளவு இணைக்கப்படுகின்றன என்பதும் முக்கிய அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலம் முதலீட்டின் பொருளாதார பலன் உள்நாட்டு தொழில்துறைக்கு உண்மையில் சென்றடைகிறதா என்பதை மதிப்பிட முடியும் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



