மித்ரா நிதி இந்தியர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பிரதமர் அன்வார் நிபந்தனை!
- THINAGAREN SANGGAREN
- 10 May, 2026
மே 10,
மலேசிய இந்தியர் உறுமாற்றுப் பிரிவான மித்ராவின் நிதி மலேசிய இந்தியர்களுக்கானது மட்டுமே என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் DATO SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். இந்தியர் அல்லாதவர்களுக்கு மித்ராவின் நிதியை வழங்க கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அது இந்தியர்களைச் சார்ந்து பயனளிக்கும் வகையில் மித்ரா இயங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் மித்ரா இனி செயல்பட வேண்டும் என பிரதமர் DATO SERI ANWAR IBRAHIM வலியுறுத்தினார்.
தாம் கடந்த காலங்களில் இந்தியர்களுக்கு அளித்த வாக்குறிதியின்படி அனைத்து சமூகத்தினரும் மலேசியர்களாகவே மடானி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என பிரதமர் DATO SERI ANWAR IBRAHIM உறுதியளித்தார். மித்ரா இப்போது மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் மனிதவள அமைச்சின் செயல்பாடுகளுக்கு மித்ராவின் நிதி பயன்படுத்தப்படாது. அது போலவே, மற்ற அமைச்சுகளிலும் இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகளும் நிதிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதால் மித்ரா அதன் நோக்கத்திற்காகவும் இந்தியர்களின் உறுமாற்றத்திற்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தவும் மட்டுமே அதன் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் DATO SERI ANWAR IBRAHIM மித்ராவுக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



