மித்ராவின் RM 100 மில்லியனைக் கூட பயன்படுத்தாத இந்திய MP-க்கள்! – பெரிக்காத்தான் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 25,

இந்திய சமூகத்திற்காக மித்ராவின் மூலமாக அரசாங்கம் வழங்கிய RM 100 மில்லியனைக் கூட பயன்படுத்த தெரியாமல் இந்திய MP-க்கள் இருப்பதாகப் பெரிக்காத்தானின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Dr Halimah Ali குற்றம்சாட்டினார். மலேசிய மக்கள் தொகையில் 6 விழுக்காடு மட்டுமே இருக்கும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அன்வாரின் ஆட்சி விளங்குகிறது என Dr Halimah Ali சாடினார்.

மித்ராவிடமிருந்து நிதி பெற ஒப்புதல் வழங்கப்பட்டும் 45 பொது இயக்கங்களுக்கு இன்னும் நிதி ஒப்படைக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக Dr Halimah Ali தெரிவித்தார். நேற்று நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பின் போது Dr Halimah Ali இதனைத் தெரிவித்தார். RM 100 மில்லியன் என்பது மிக சிறிய தொகை, ஆனால் அதை முறையாகப் பயன்படுத்த தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் நிதி அமைச்சிற்கு இந்த நிதி திருப்பி வழங்கப்பட்டு விடும் என்பதையும் Dr Halimah Ali எச்சரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *