அனைத்து அமைச்சுகளும் இந்தியர்களின் நலனைக் காக்கும்! மித்ரா மட்டுமல்ல! நாடாளுமன்றத்தில் ரமணன்!
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
மித்ரா மட்டுமே இந்தியர்களின் நலனைப் பாதுக்காக்கும் ஒரே தலமாக இருக்கிறது என்பதைத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan நாடாளுமன்றத்தில் மறுத்தார். மடானி அரசாங்கத்தில் உள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளதாக Datuk Seri R Ramanan நினைவூட்டினார். குறிப்பாகத் தமது அமைச்சின் மூலமாகவும் இந்தியர்களுக்கான சிறப்புத் திட்டங்களைத் தாம் உருவாக்கியிருப்பதையும் Datuk Seri R Ramanan சுட்டிக்காட்டினார்.
மனிதவள அமைச்சின் PERKASA திட்டம், கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், வீட்டுவசதி உள்ளாட்சி அமைச்சின் கோயில்கள் பராமரிப்புக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு, ஒற்றுமை அமைச்சின் தர்மா மடானிக்கு 20 மில்லியன் ரிங்கிட் என மக்கள் நலத்திட்டங்கள் கொண்டிருக்கும் அனைத்து அமைச்சிலும் இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதைத் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan சுட்டிக்காட்டினார்.
மித்ரா மூலமாக
நடத்தப்படும் திட்டங்களுக்கு அரசு சாரா இயக்கங்கள் மேற்கொண்ட செயல்திட்டங்கள் குறிப்பிட்ட
சுற்று வட்டாரத்தில் வாழும் இந்தியர்களுக்கு உதவியாக இருந்தாலும் அரசு துறைகளின் மூலமாக
மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்கள் நாடு முழுவதுமுள்ள இந்தியர்களுக்கு நலன் பெறும் வகையில்
செயல்படுமென Datuk Seri
R Ramanan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



