மித்ராவுடன் இந்திய MP-க்கள் சந்திப்பு! – பிரபாகரன் விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 23 Jul, 2025
ஜூலை 23,
இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின் நடவடிக்கைகள் குறித்தும் 13-ஆவது மலேசியத் திட்டம் குறித்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக மித்ரா நடவடிக்கைக் குழுத் தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான YB பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சரும் BATU GAJAH நாடாளுமன்ற உறுப்பினருமான Sivakumar Varatharaju, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் YB Yuneswaran Ramaraj, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் YB Ganabatirau Veraman சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் YB Kesavan Subramaniam ஆகியோருடன் மித்ரா தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி அவர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில்
மித்ரா குறித்தான அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் இந்தியச்
சமூகத்தின் மேம்பாடுகள் குறித்தும் அதன் அடிப்படை தேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும்
இந்த சந்திப்பின் மூலமாக ஒரு முன்முயற்சிக்கான அடுத்தக்கட்ட நகர்வாக அமையும் என தாம்
நம்புவதாக மித்ரா நடவடிக்கைக் குழுத் தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான YB பிரபாகரன் பரமேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



