புதிய குழப்பத்தை உண்டாக்காதீர்! சரவணனுக்கு ரமணன் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 30,

தீபாவளிக்கு வழங்கப்படும் உணவுக் கூடைகள் குறித்து ம.இ.கா துணைத் தலைவர் சரவணன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது தமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருப்பதாகத் துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார். மித்ரா நிதியின் மூலமாக இந்தியர்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய கூடைகள் வழங்கியதைத் தாம் மறுக்கவில்லை என்றும் மித்ராவின் 0.8% நிதி மட்டுமே உணவுப் பொருள்கள் அடங்கிய கூடைகள் வழங்க பயன்படுத்தப்பட்டதாகத் துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார். இந்த உணவுக் கூடை திட்டம் வழங்குவது இந்தியர்களுப் பயனளிக்காது என சரவணன் நினைத்தால் அவர் அமைச்சராக இருந்த போது இதே மித்ராவின் நிதியைப் பயன்படுத்தியதை ரமணன் சுட்டிக்காட்டினார். 

அப்போது பயன்படுத்தப்பட்ட மித்ரா நிதியை விடவும் தற்போது மிகவும் குறைவான நிதியை மட்டுமே உணவுக் கூடைகளுக்காகப் பயன்படுத்தியிருப்பதாக ரமணன் தெரிவித்தார்.வறுமையில் இருப்பவர்கள் தங்கள் பண்டிகைகளின் சிரமமில்லாமல் கொண்டாட அடிப்படை உதவிப் பொருள்கள் கொண்ட பொருள் கூடைகளை வழங்கியதில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என ரமணன் கேட்டுக்கொண்டார்.   மித்ரா திட்டத்தின் மூலமாகப் பயனடைந்தவர்கள் B40 குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. முறையான ஆய்வுக்குப் பின்னரே இந்த தீபாவளி உணவுக் கூடைகள் வறுமையில் இருக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகத் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *