மித்ரா மீது அவதூறு பரப்பாதீர்! - எங்கள் குரல் ஒலிக்கும்! - செனட்டர் லிங்கேஸ்வரன் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 14,

எதிர்கட்சி இந்திய தலைவர்கள் மித்ரா மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்திருந்த கருத்து நேற்று (ஜுலை 14) தமிழ் மலர் நாளிதழில் இடம்பெற்றிருந்தது. தமிழ் மலர் செய்தியைக் கண்டதும் சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிப்பதாகத் தெரிவித்த நிலையில் செனட்டர் லிங்கேஸ்வரன் தமிழ் மலருக்கு விளக்கம் அனுப்பியிருந்தார்.

YB SENATOR DR R.A. LINGESHWARAN  விளக்கத்தில் – சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் தமிழ் மலர் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திகள் குறித்து ஒரு செனட்டராகவும் அரசியல்வாதியாகவும் எனது விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். மித்ரா தொடர்பாக நாடாளுமன்றத்திலும் மக்களவையிலும் தொடர்ந்து கேள்விகளையும் அதன் செயல்பாடுகள் குறித்தான விளக்கங்களையும் தாம் தொடர்ந்து நான் மக்களவையில் குரல் கொடுத்து வருகிறேன்.

மித்ராவின் நடவடிக்கைக் குழு தலைவராக இருக்கும் பிரபாகரனும் பிரதமர் ஒரே கட்சியைப் பிரதிநிதிப்பதால் விரைந்து மித்ரா நிதி சம்மந்தப்பட்டவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் பிரபாகரன் வழிவகுப்பார். இதனை பிரபாகரன் முன்னமே வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் மித்ரா தொடர்பாக 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பதில்லை என குறை கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. கட்சி பேதமின்றி செனட்டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மித்ரா குறித்தான சிக்கல்களைக் குறிப்பிட்டு குரல் எழுப்பி வருகின்றனர் என்பதையும் குறை கூறுபவர்கள் உணர வேண்டும்.

மித்ரா குறித்தான செயல்பாடுகளை வெளிப்படையாக இந்தியர்கள் அறிந்திருக்க வேண்டும். அதன் தார்மீகத்தை மதித்து மித்ரா குறித்து தவறான கருத்துகளைப் பரப்பி இந்தியர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். மித்ராவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பும் என்னை உட்பட அனைவருக்கும் இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு செனட்டர் லிங்கேஸ்வரன் தமிழ் மலர் நாளிதழிடம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *