793 இந்தியக் குடும்பங்களுக்கு மாதம் RM 500 உதவித் தொகை! RM 1,139,730 மித்ரா நிதி!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் வாயிலாக நாட்டின் வறுமை நிலையிலிருக்கும் 793 இந்தியக் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுவதாக மித்ராவின் சிறப்புப் பணிக்குழுத் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார். மித்ராவின் சினார் சஹாயா உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,139,730 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மாதம் 500 ரிங்கிட் என 3 மாதங்களுக்கு இந்த உதவி நிதியை 793 இந்தியக் குடும்பங்கள் பெறுவார்கள் பிரபாகரன் தெரிவித்தார்.
இதன் தொடக்கமாக ஸ்ரீ கூச்சிங், சிதாப்பாக், பத்து ஆயர் பானாஸ், ஸ்ரீ இந்தான் பைடூரி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்குப் பிரபாகரன்
மித்ராவின் சினார் சஹாயா உதவி நிதியை நேரில் சென்று வழங்கினார். மித்ராவின் செயல்பாடுகள்
குறித்தான சர்ச்சைகளுக்கு நாடாளுமன்றத்திலும் செய்தியாளர்களிடமும் அவ்வப்போது விளக்கமளித்து
வருவதாகவும் முக்கியமாக மித்ராவின் தலைமைகள் தொடர்ந்து மாற்றம் காணப்படுவதால் அதன்
திட்டங்களின் விளைவுகள் பாதிகப்படுவதையும் மித்ராவின் சிறப்புப் பணிக்குழுத் தலைவரும்
பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் குறிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



