9 ரஃபிஸி உட்பட எம்பிக்களை உடனடியாக இடைநீக்கம் செய்வீர்!-19 பிகேஆர் தொகுதிகள் அதிரடி கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 13-

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிஸி ரம்லியும் அவருடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் எட்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

நீதித்துறையில் தலையிட்டது மற்றும் நீதிபதிகள் நியமனம் குறித்து விசாரணை நடந்த அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்து வருவதற்காக. அந்த ஒன்பது பேரும் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று, ஜொகூரில் உள்ள 19 பிகேஆர் தொகுதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

"அந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் கட்சியின் கட்டொழுங்கு மற்றும் நெறிமுறைகளை மட்டும் மீறியிருக்கவில்லை.'ஆனால், பிரதமரின் தலைமைத்துவத்திற்கு எதிராக ஓர் எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், எதிர்க்கட்சிகள் அரசியல் சித்து விளையாட்டை விடுவதற்கான கதவையும் திறந்து வைத்துள்ளனர்" என்று. அந்த 19 தொகுதித் தலைவர்களும் கூறியுள்ளனர்.

“இதில் சம்பந்தப்பட்டுள்ள அந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்பியத்துவத்தை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு, கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபுஷியா சாலேவை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அவர்கள் வலியுறுத்தினர்.

ஜொகூரின் மொசிங், பக்ரி, பெங்கேராங், ஸ்ரீ காடி. செம்புரோங், ஆயர் ஈத்தாம். மூவர், இஸ்கண்டார் புத்ரி, பாசிர் கூடாங், தெப்ராவ், பொந்தியான், குளுவாங், பாரிட் சூலோங், தஞ்சோங் பியாய், பாகோ, செகாமாட் கோத்தா திங்கி, லாபிஸ் மற்றும் பூலாய் ஆகிய 19 பிகேஆர் தொகுதிகள் அந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.

பண்டான் எம்பி ரஃபிஸி ரம்லி, செத்தியாவங்சா எம்பி நிக் நஸ்மி நிக் அஹ்மாட்ட அம்பாங் எம்பி ரொட்ஸியா இஸ்மாயில், சுபாங் எம்பி வோங் சென். வங்கா மாஜு எம்பி ஸாஹிர் ஹசான், பாலேக் பூலாவ் எம்பி முஹமட் பக்தியார் வான் சிக், லேடாங் எம்பி சைட் இப்ராஹிம் சைட் நோ சுங்கை சிப்புட் எம்பி எஸ். கேசவன் மற்றும் பத்து பகாட் எம்பி ஓன் அபு பாக்கார் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்குமாறு அந்த 19 தொகுதித் தலைவர்களும் ஃபுஷியாவை வலியுறுத்தினர்.

நீதித்துறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த அத்தொகுதித் தலைவர்கள், ஆனால் அந்த ஒன்பது எம்பிக்களின் அணுகுமுறை கட்சி ஒழுக்கத்தையும் உறுப்பினர்களின் நெறிமுறைகளையும் மீறியிருப்பதாகக் கூறினர்.கட்சியின் முடிவுகளை மதிப்பது. ரகசியத்தைக் காப்பது, கட்சியின் நற்பெயரைப் பேணுவது, கட்சியின் முடிவுகளையோ அல்லது அதன் தலைமையையோ கீழறுப்பு செய்யப்படுவதை தடுப்பது உட்பட பல விதிகளை இதற்கு அவர்கள் மேற்கோள் காட்டினர்.

இந்நிலையில், தங்களின் செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள அந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் கடந்த செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஒற்றுமை அரசாங்கம் மீது ஏற்படுத்தக் கூடிய நெருக்குதல்கள் ஒரு பொது விசாரணை தொடர்பிலான அரசியல் உட்பட ஒரு தாக்கங்களையும் அவர்கள் அவசியம் பரிசீலிக்கவும் வேண்டும் என்று ஹசான் கூறியிருந்தார். மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் நியமனங்களில் காலதாமதம் நிலவுவதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்வுக் குழுவினால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் ரஃபிஸி குழுவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *