குடிநுழைவுத்துறை தீபாவளி! தலைநகரில் உற்சாக கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், நவ 19: கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி சிறப்பு விருந்துபசரிப்பு, தலைநகரில் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜக்காரிய ஷபான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

ஆடல் பாடல் என உற்சாகமாக நடைபெற்ற விழாவில், மூவினத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து ஒற்றுமையைப் பறைசாற்றினர்.

பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு பெருநாளையும் நாம் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது பிரதமரின் விருப்பப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற விழாக்கள் உறுதுணையாக அமையும் என்று ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.

நிகழ்வில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும், கிள்ளான் ஐஸ்வர்யா ஃபைன் ஆர்ட்ஸ் மாஸ்டர் பிரவின் வயலின் இசையும் மேலும் மெருகூட்டியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *