நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் கோலாலம்பூரில் ஐந்து இடங்களை குடிநுழைவு இலாகா கண்காணிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 28 -

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் காலகட்டத்தில், வெளிநாட்டினரை அதிகளவில் கவரும் இடங்களாக விளங்கும் கோலாலம்பூரில் உள்ள ஐந்து முக்கிய இடங்களை குடிநுழைவு இலாகா கண்காணிக்க விருக்கிறது.புக்கிட் பிந்தாங், ஜாலான் சீலாங், கோத்தா ராயா, மஸ்ஜிட் இந்தியா மற்றும் கேஎல்சிசி ஆகியவையே அந்த ஐந்து இடங்கள் என்று. கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா இயக்குநர் வான் முஹமட் சௌபி வான் யூசோப் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

“ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக இப்பெருநாள் காலகட்டத்தில் அதிகாரிகள் அப்பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.பொதுமக்கள் மற்றும் சுற்றுப் பயணிகளுக்கான சௌகரியமான சூழலை நிலைநாட்டுவதுடன், அந்நிய நாட்டவர்கள் குடிநுழைவுச் சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, சுகாதார அமைச்சு, சாலைப் போக்குவரத்து இலாகா, மாநகராண்மைக் கழகம் மற்றும் போலீஸ் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து தமது இலாகா அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பதாகவும் வான் முஹமட் தெரிவித்தார்.செல்லுபடியாகும் ஆவணங்களை உடன் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அந்நிய நாட்டவர்களுக்கு நாங்கள் நினைவுறுத்த விரும்புகிறோம்.

"கோலாலம்பூரில் உள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களும் குடிநுழைவு ஆவணங்களைக் கொண்டிருக்காதவர்கள் என்று கூறவில்லை. பலர் செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருக்கின்றனர். விடுமுறை காலத்தில் தங்களின் நண்பர்களை சந்தித்து பொழுதைக் கழிக்க அவர்கள் விரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரையில் மொத்தம் 150 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்நடவடிக்கைகளின்போது 43 முதலாளிமார்களும் குடிநுழைவு ஆவணங்களை வைத்திருக்காத 1,099 வங்காளதேச, சீன, இந்திய, இந்தோனேசிய, மியன்மார், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்னாமிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“முறையான ஆவணங்களை வைத்திருக்காத குற்றத்திற்கு, 53 மாத சிறை, ஒரு பிரம்படி மற்றும் 30 ஆயிரம் வெள்ளி அபராதம் ஆகிய கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முறையான ஆவணங்களை வைத்திருக்காத குற்றங்களுக்காக, குடியேறிகள் மற்றும் முதலாளிமார்களிடம் இருந்து 28 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி வசூலிக்கப்பட்டிருப்பதாக வான் முஹமட் கூறினார்.

Jabatan Imigresen Kuala Lumpur akan memantau lima lokasi utama semasa Aidilfitri bagi memastikan pematuhan undang-undang imigresen. Sejak Januari, 1,099 pendatang tanpa dokumen sah dan 43 majikan ditahan, dengan denda keseluruhan RM2.81 juta serta hukuman penjara dan sebatan dikenakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *