விபச்சாரக் கும்பலை குடிநுழைவுத் துறையினர் முறியடித்தனர்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஜூலை 30-

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜாலான் துன் டான் சியூ சின்னில் உள்ள ஓர் அடுக்குமாடிக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நடவடிக்கையில் வெளிநாட்டவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த ஒரு சீன ஆடவரும் 3 வங்காளதேச ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.இச் சோதனையில் 15 பெண்களும் வாடிக்கையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் சௌபி சொன்னார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் இந்தோனேசியா,வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *