106 கைதிகளுக்கு மன்னிப்பு!
- Shan Siva
- 19 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 19: கூட்டரசுப் பிரதேசங்களில் மொத்தம் 106 கைதிகளுக்கு 2006 முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் முழு மன்னிப்பு வழங்கியுள்ளதாக பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓஸ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் 44 பேருக்கு தண்டனை குறைக்கப்பட்டதாகவும்,
மீதமுள்ளவர்களுக்கு அசல் தண்டனைகள்
தொடரப்பட்டதாகவும் கூறினார்.
இந்தக்
காலகட்டத்தில், கோலாலம்பூர்,
புத்ராஜெயா மற்றும் லாபுவானை உள்ளடக்கிய
வாரியம், பல்வேறு பிரிவுகளின் கீழ்
ஏராளமான கருணை வழக்குகளை மதிப்பாய்வு செய்துள்ளதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



