சபா தேர்தலில் அம்னோ, தேசிய முன்னணி 73 இடங்களிலும் போட்டியிடாது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 22-

சபா மாநில தேர்தலில் அம்னோ, தேசிய முன்னணி 73 இடங்களிலும் போட்டியிடாது என அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார்.17ஆவது சபா மாநிலத் தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அம்னோ, தேசிய முன்னணி அனைத்து 73 இடங்களிலும் போட்டியிடாது.
இருப்பினும், அம்னோவும் தேசிய முன்னணியும் போட்டியிடுவதற்கு ஏற்றதாக நினைக்கும் இடங்களின் எண்ணிக்கையை அடையாளம் கண்டுள்ளன.

இது 2020 பொதுத் தேர்தலின் போது வென்ற 14 இடங்களை விட அதிகமாகும்.இதில் புதிய மாநிலத் தொகுதிகளும் அடங்கும்.முன்னர் வென்ற 14 இடங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் கட்சி மாறியதால் ஆறு இடங்களை இழந்தது.எத்தனை இடங்களை இறுதி செய்வோம் என்பதை நான் அறிவிப்பேன்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இடங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லக்கூடிய இடங்கள்.மேலும் இந்த இடங்கள் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய சபா மாநிலத்தில் உள்ள மூன்றாவது சக்தியுடன் நாங்கள் ஒத்துழைப்போம் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *