அம்னோ புறக்கணிக்கப்படவில்லை! – பத்து பக்காத்தான் ஹரப்பான்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 19: தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், பக்காத்தான் ஹராப்பான் உடனான தொடர்பை துண்டிப்பதாகவும் பத்து தொகுதி அம்னோ  அறிவித்ததை அடுத்து,  கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் அரசியல் செயலாளர் நூர் அஸ்ரீனா சூரிப் அக்குற்றச்சாட்டை இன்று மறுத்தார்.

அரசின் பல்வேறு திட்டங்கள் எப்போதும் அம்னோ  உட்பட பல தரப்பினரின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் நகரசபை ஆலோசனைக் குழுவிலும் புத்ராஜெயா கார்ப்பரேஷனிலும் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டிய அவர், அவை அனைத்தும் திறமை அடிப்படையில், கவனமாக ஆய்வு செய்த பிறகு செய்யப்பட்ட நியமனங்களாகும் என்று கூறினார்.

மேலும், அம்னோவைச் சேர்ந்த தித்திவாங்சா எம்.பி. ஜொஹாரி கானி கூட்டார்சுப் பிரதேசங்களுக்கான அமைச்சரவை கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அதேபோல, அம்னோ செயற்பாட்டாளர்கள் தலைமையிலானவை உட்பட, அரசியல் சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் சிறப்பு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் பத்து அம்னோ  புறக்கணிக்கப்படவில்லை. ரமலான் பஜார் நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டை முன்னிட்டு, டத்தோ குலாம் தலைமையிலான ஹாக்கர் சங்கத்தின் தோல்வியை இந்த உண்மைகளை மறுப்பதற்குப் பயன்படுத்துவது நியாயமல்லஎன் று அவர் தெரிவித்தார்.

பத்து அம்னோ பிரிவு தலைவர் குலாம் முஸ்ஸாபர் குலாம் முஸ்தாகிம், இரண்டு நாட்களுக்கு முன், கூட்டரசுப் பிரதேசங்களில் பக்காத்தான் ஹராப்பான் உடன் உள்ள தொடர்பை துண்டிப்பதாக அறிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *