அம்னோ இனி இளைஞர்களின் கைகளில்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்.  மே 3: அம்னோ கட்சியின் 100வது ஆண்டு விழாவை நோக்கிய அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஆயத்தப் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ள நிலையில், அதன் எதிர்காலம் இளம் தலைவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி கூறினார். இறுதியில் கட்சியைப் பொறுப்பேற்று வழிநடத்தப் போகிறவர்களுக்கு, கட்சியின் தற்போதைய தலைமை ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று கட்சியின் தலைவருமான கூறினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் 80வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில், அவர் இவ்வாறுகூறினார். நாம் முன்னோக்கிப் பார்த்து நமது நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு தேர்தலுக்கு மட்டுமல்ல, அடுத்த 20 ஆண்டுகளுக்கு என்று பாரிசான் நேஷனல் தலைவராகவும் இருக்கும் ஜாஹிட் கூறினார்.

அம்னோவின் தற்போதைய தலைமுறைத் தலைவர்கள் இறுதியில் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அவர் கூறினார். அரசியல் புதுப்பித்தல் என்பது தலைமுறைகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையின் மீது கட்டப்பட வேண்டும் என்று இளம் தலைவர்களுக்கு அவர் நினைவூட்டினார். நானும் ஒரு காலத்தில் இளைஞனாக இருந்தேன். கைரியும் ஒரு காலத்தில் இளைஞனாக இருந்தார், இப்போதும் அவர் இளைஞனாகவே இருக்கிறார். ஒரு இளம் தலைவராக, மன உறுதி வலுவாக உள்ளது.

ஆனால், இளைஞர்கள் ஒரு நாள் முதியவர்களாகி விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதியவர்கள் இளைஞர்களை நேசிக்க வேண்டும், இளைஞர்கள் முதியவர்களை மதிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 20 அன்று தனது இணையவழிப் பதிவு தளத்தைத் திறந்த இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், அம்னோ 13,954 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர் உறுப்பினர்களே;  8,233  பேர் பதிவுகளைச் செய்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *