மௌனமான ஆட்சேபத்தை” தவிர்க்க மஇகாவுடன் அம்னோ பேசவேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 19

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்கள் மத்தியில், "மெளனமான ஆட்சேபம் நிலவுவதைத் தவிர்க்க, மஇகாவுடன் நேருக்கு நேர் கலந்து பேசுமாறு அம்னோ வலியுறுத்தப்பட்டுள்ளது. மஇகா இன்னமும் அடிமட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், தேசிய முன்னணி கவனமாக இருக்க வேண்டும் என்று அவாங் அஸ்மி அவாங் பவி கூறியுள்ளார்.

ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே தற்போது மஇகா கொண்டிருப்பதை வைத்துப் பார்த்தால், அக்கட்சி சிறியதாக இருந்தாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் அது பாரம்பரிய வாக்காளர்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“உதாரணத்திற்கு, சிகாமட் தாப்பா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிகளைக் கூறலாம். தற்போது நிலவி வரும் அதிருப்தி தீர்க்கப்படாவிட்டால்,
ஏமாற்றத்தின் அறிகுறியாக தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்காளிக்காமல் அல்லது எதிர்க்கட்சியினருக்கு வாக்களிப்பதென்று முடிவு செய்யும் ஆட்சேப நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஈடுபடக் கூடும் என்று,  அவாங் அஸ்மான் தெரிவித்துள்ளார்.

மூவின வாக்காளர்கள் கலவையாக இருக்கும் தொகுதிகளில், ஒன்று அல்லது இரண்டு விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் திசைமாறினாலும், தேசிய முன்னணி அல்லது அம்னோ அத்தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி என்று. மலாயாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவரான அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மஇகாவும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் "அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகளை நடத்தி இருப்பதை, அதன் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் ஒப்புக் கொண்டிருந்தார்.

இதனிடையே, இப்போதைக்கு அம்னோவினால் மஇகாவுக்கு அதிகளவில் எதையும் செய்ய முடியாது என்று. மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாவ் ஷி வேய் நம்புகிறார்.
"நடப்புச் சூழ்நிலையில், அம்னோவினால் அதிக அளவில் வாக்குறுதிகளை நிச்சயமாக அளிக்க முடியாத நிலை நிலவுகிறது. இப்போதைக்கு அதனால் செய்ய முடிவதெல்லாம். ஆறுதல் கூறுவதாகத்தான் இருக்க முடியும்.

ஆதலால், எதையாவது செய்யுமாறு அம்னோவிடம் கேட்பதைக் காட்டிலும், பெரிக்காத்தான் நேஷனலுடன் ஒத்துழைப்பதா இல்லையா என்று முடிவு செய்வது குறித்து மஇகா சொந்தமாக சிந்திக்க வேண்டும்" என்று லாவ் தெரிவித்தார்.பெரிக்காத்தானுடன் இணைந்தால் ஒருவேளை மஇகா அதிகமான தொகுதிகளைப்பெறக் கூடும் என்றாலும், அத்தொகுதிகளில் வெற்றி பெறாமல் போனால், அவ்வளவு தொகுதிகளினால் எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒத்துழைக்கும் தீர்மானங்களை, பல மாநில மஇகா தலைமைத்துவங்கள் கடந்த வாரத்தில் நிறைவேற்றி இருந்தன. அதோடு, தேசிய முன்னணியை விட்டு விலகும் சாத்தியமும் மறுக்கப்படவில்லை.மாநில மஇகா தலைமைத்துவங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தாலும், இதன் தொடர்பிலான இறுதி முடிவை கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் என்று அம்மாநிலத் தலைவர்கள் கூறியிருந்தனர்.

இந்திய சமூகத்தின் எதிர்கால நலனுக்காக கட்சித் தலைமைத்துவம் இறுதி முடிவை எடுக்கும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்."தேசிய அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. இந்த யதார்த்தத்தை மஇகா ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நாங்கள் காணாமல் போய்விடுவோம். நாங்கள் பலவீனமானவர்களாகப் பார்க்கப்படுவதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.

"இருப்பினும், எங்கள் கட்சியைப் பற்றி இவ்வளவு பேர் இன்னும் விவாதித்து வருவது விந்தையாக இருக்கிறது. ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை" என்றும் அவர் கூறியிருந்தார்.மஇகா பற்றிய கருத்துகளையும் ஆய்வுகளையும் கட்சி நம்பவில்லை என்று கூறிய விக்னேஸ்வரன், தனது அடிமட்ட உறுப்பினர்கள் மட்டுமே அதை நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *