நெகிரி செம்பிலான் அரசுக்கு அம்னோ ஆதரவு! - ஜாஹிட் திட்டவட்டம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 1: நெகிரி செம்பிலானில் உள்ள 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹரூனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தொடர்ந்து, நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த நிலைப்பாடு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

ஜனநாயக விரோத வழிகளில் மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றவோ அல்லது புதிய அரசாங்கத்தை அமைக்கவோ அந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எண்ணம் இல்லை என்று ஜாஹிட் தெரிவித்தார்.
அவர்களின் உண்மையான நோக்கம் குறித்து மாறுபட்ட கண்ணோட்டங்களும் விளக்கங்களும் இருந்ததால்,  தாம் அனைத்து 14 சட்டமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

எதையும் திரும்பப் பெறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மாறாக, நெகிரி செம்பிலானின் அரச நிறுவனமும் பழக்கவழக்கங்களும் அனைவராலும் மதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு நல்லெண்ண நடவடிக்கை இது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் அரச நிறுவனம் மற்றும் பழக்கவழக்கங்கள் (அடாட்) தொடர்பான ஒரு நெருக்கடியை அமினுடின் ஹாருன் கையாண்ட விதம் காரணமாக,  அவர் மீது நம்பிக்கை இழந்ததைக் காரணம் காட்டி, 14 சட்டமன்ற உறுப்பினர்கள் திங்களன்று அமினுடினுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *