ஒற்றுமை அரசிலிருந்து அம்னோ விலகுவது சாத்தியமில்லை! – அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: ஒற்றுமை அரசிலிருந்து அம்னோ அல்லது பாரிசான் நேஷனல் விலகுவது இக்காலகட்டத்தில் சாத்தியமில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்னோ தனது அரசியல் பலத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் ஒற்றுமை அரசில் தொடர்வது ஒரு மிக அவசியம் என்று மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஸ்லான் அலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒற்றுமை அரசில் தொடருவோம் என அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி சமீபத்தில் தெரிவித்திருப்பது, கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இதனால், அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சாலே முன்வைத்துள்ள “அரசிலிருந்து விலக வேண்டும்” என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், அது அவரது தனிப்பட்ட கருத்தாக மட்டுமே பார்க்கப்படுவதாகவும் மஸ்லான் அலி விளக்கினார்.

டிஏபி தலைவர்கள் கூறும் சில கருத்துகளை முன்வைத்து ஒற்றுமை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திலான பேச்சு மட்டுமே என்றும், அது அம்னோவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பாஸ் கட்சியுடன் முன்பு இருந்த முஆஃபகாத் நேஷனல் போன்ற கூட்டணி மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும், அத்தகைய கூட்டணி கட்சிக்குள் இடைத்தேர்வு மற்றும் தொகுதி போட்டி போன்ற சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

அம்னோவில் இளைஞர் அணியே அரசிலிருந்து விலக வேண்டும் எனக் குரல் எழுப்பி வருவதும், மகளிர் மற்றும் புத்ரி அணிகள் அந்த நிலைப்பாட்டை ஆதரிக்காததும், இது கட்சியின் கூட்டுத் தீர்மானமல்ல என்பதை வெளிப்படுத்துவதாக மஸ்லான் அலி குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் சியாசா ஷுக்ரி கூறுகையில், அம்னோ அரசிலிருந்து விலகினாலும் ஒற்றுமை அரசு தொடரும் என்பதால், அரசியல் லாபம் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியாக மாறுவது பொருத்தமற்றது என்றார்.

அதேபோல், நுசாந்தாரா அகாடமியின் ஆய்வாளர் அஸ்மி ஹசான், சமீபத்தில் நடைபெற்ற அம்னோ இளைஞர் மாநாடு, அரசிலிருந்து விலக வேண்டும் என்ற ஒருதலைப்பட்சக் கருத்தை மட்டுமே முன்வைத்ததாகவும், கட்சியை வலுப்படுத்தும் தெளிவான திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

ஒற்றுமை அரசில் தொடர்வதே ஆம்னோ மீண்டும் தனது அரசியல் அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கான சிறந்த பாதை என்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *