கோயில்களுக்கு எதிரானப் போராட்டம்! மோடிக்கு எதிரானதா?
- Thinagaren Sanggaren
- 08 Feb, 2026
பிப்ரவரி 8,
நேற்றிரவு தலைநகர் SOGO வணிக வளாகத்தின் முன் கோயில்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி, உள்நோக்கம் கொண்டது என புலனாய்வுத் தகவல் கிடைத்திருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். நேற்று இந்தியாவின் பிரதமர் மலேசியாவுக்கு 2 நாள்கள் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் பிரதமர் மோடிக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்படலாம் என காவல்துறை சந்தேகித்து நேற்றைய பேரணியைக் கண்காணிக்க 200க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.
அரசு நிலங்களிலும் தனியார் நிலங்களிலும்
கட்டப்பட்டிருக்கும் இந்துக் கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தைக்
கொண்டு இந்த பேரணி சர்ச்சைக்குரிய மத போதகர் ZAMRI VINOTH, மகாதீரின்
முன்னாள் தலைமை வழக்கறிஞர் Haniff Khatri, கோயில்களை இடிக்க
கனரக வாகனம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த Tamim Dahri, Jamalee Bashah ஆகியோரின் தலைமையில் நேற்று தலைநகர் SOGO
வில் இந்த பேரணி நடத்தப்பட்டது. கோயில்களுக்கு எதிரான ஆர்பாட்டப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 4 பெண்கள்
19 ஆண்கள் என மொத்தம் 24 பேரைக் காவல்துறை கைது செய்திருந்த நிலையில்
அவர்களில் Zamri Tamim, Fadil ஆகிய மூவரை மட்டும் தடுப்புக் காவலில்
வைத்து. அதிகாலையில் மற்ற 20 பேரையும் காவல்துறை விடுதலை செய்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



