ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் முகமட் ஹாசான் பங்கேற்பு

top-news

செபூ நகரம் (பிலிப்பைன்ஸ்), ஜன. 28-

ASEAN வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க, மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசான் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்.

அவர் மாக்தான்–செபூ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரத் துறை (DFA) உதவி செயலாளர் ஆரியல் ரொடெலாஸ் பென்யரண்டா அதிகாரப்பூர்வமாக வரவேற்றார்.

பிலிப்பைன்ஸ் ASEAN தலைமைத்துவத்தில், “எங்கள் எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துதல்” (Navigating Our Future, Together) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில், மலேசியக் குழுவை முகமட் ஹாசான் தலைமையேற்றுள்ளார். இது 2026 ஆம் ஆண்டுக்கான ASEAN இன் முதல் அதிகாரப்பூர்வ வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டமாகும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *