பண மோசடி வழக்கு; நேபாள முன்னாள் நிதி அமைச்சர் அதிரடியாகக் கைது

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு, ஜூன் 25 –

பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பௌடெல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராக புதிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN-UML) மூத்த தலைவரான 66 வயதான விஷ்ணு பிரசாத் பௌடெல், நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றியவர். அவர் மேற்குப் நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பௌடெல், மேலதிக விசாரணைக்காகக் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பணமோசடி விசாரணைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு நேபாளத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *