பி40 மக்களுக்கான பழைய மோட்டார் சைக்கிள் ஊக்கத் திட்டம் – அரசு பரிசீலனை

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், மார்ச் 14-

குறைந்த வருமானம் கொண்ட பி40 மக்களுக்கு பழைய மோட்டார் சைக்கிள்களை ஒப்படைத்து புதிய வாகனங்களை பெற உதவும் ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவை போக்குவரத்து அமைச்சு (MOT) பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பான பரிந்துரை சமீபத்தில் ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பிலிருந்து (NGO) அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அதனை விரிவாக ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த முயற்சி முழுமையாக அரசின் நிதி ஆதரவை மட்டுமே சார்ந்து செயல்பட முடியாது என்றும், உள்ளூர் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விளக்கினார்.

“உற்பத்தியாளர்கள் தங்களின் முயற்சியுடன் அரசிடம் திட்டத்தை கொண்டு வந்தால், அதை பற்றி அரசு விவாதிக்கத் தயார். இந்த முயற்சி தனிப்பட்ட முறையில் அரசால் மட்டும் முன்னெடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *