வாகனத்தைத் துரத்திய 20 மோட்டார் சைக்கிளோட்டிகள்! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 29 Sep, 2025
செப்டம்பர் 29,
பூச்சோங் சாலையில் வாகனத்தைத் துரத்திய 20 மோட்டார் சைக்கிளோட்டிகளைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad தெரிவித்தார். நேற்றிரவு பூச்சோங்கில் உள்ள BATU TIGA BELAS சுங்கச் சாவடியைக் கடந்ததும் 20 மோட்டார் சைக்கிளோட்டிகள் MYVI வாகனத்தைத் துரத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது. காணொலியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளோட்டிகளில் 20 மோட்டார் சைக்கிளோட்டிகளைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாக செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad தெரிவித்தார்.
MYVI வாகனமோட்டி மோட்டார் சைக்கிளோட்டிகளிடமிருந்து தப்பித்து காவல் நிலையத்தில்
புகார் அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட 52 வயது MYVI வாகனமோட்டி
தானியார் பாதுகாவலர் என செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் வாகனத்தின்
கண்ணாடிகளும் வலதுபுறக் கண்ணாடி, வாகனத்தின் கதவுகள் சேதமடைந்திருப்பதாகவும்
செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad
Farid Ahmad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



