நாய் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி!

top-news

ஜூன் 8,

சாலையில் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 7.35 மணிக்குக் கம்பாரிலிருந்து கோத்தா பாரு செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud தெரிவித்தார். உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 42 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக Mohamad Nazri Daud தெரிவித்தார்.

இன்று காலை வழக்கம் போல வேலைக்காகக் கம்பாரிலிருந்து கோத்தா பாருவுக்குச் சென்றுக்கொண்டிருந்த போது சம்மந்தப்பட்ட நாய் திடீரென குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நாயை மோதியதாக நம்பப்படுகிறது. மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த 42 வயது உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கம்பார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud தெரிவித்தார்.

Kejadian tragis berlaku apabila seorang penunggang motosikal berusia 42 tahun maut di tempat kejadian selepas melanggar seekor anjing yang melintas secara tiba-tiba di jalan dari Gua Musang ke Kota Bharu pagi tadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *